திண்டுக்கல்லில் உள்ள பழக்கடைகளில் வேதியியல் பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்-உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு ரக மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு விற்பனைக்கு வந்துள்ள மாம்பழங்களை சிலர் குடோன்களில் இயற்கை முறையில் பழுக்க வைக்காமல், செயற்கையாக ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்வம் தலைமையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளின் குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் எத்தாமலின் என்ற வேதியல் கற்களை கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 100 கிலோ இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் குடோன் உரிமையாளர்கள் 2 பேருக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற ரசாயன பொருட்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment