சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 450 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையை அமைச்சர் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த 450 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கோதை, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜா, சிறுமலை வன உரிமைக்குழு தலைவர் நெடுஞ்செழியன், சிறுமலை ஊராட்சி உறுப்பினர் வெள்ளிமலை, கர்ப்பிணித்தாய்மார்கள், பெரியோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment