மாநில அளவிலான மினி மராத்தான் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மினி மராத்தான் போட்டி பள்ளி அருகே நடைபெற்றது. போட்டியை ஜி.டி.என் கல்லூரி தாளாளர் ரெத்தினம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி,
மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், எம்.எஸ்.பி பள்ளி தாளாளர் முருகேசன், உதவி தலைமை ஆசிரியர் துரைராஜ், மாவட்ட தடகள சங்க தலைவர் துரை ரெத்தினம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 25 ஆயிரம், 2ஆம் பரிசு 20 ஆயிரம், 3ஆம் பரிசு 15 ஆயிரம், 4ஆம் பரிசு 3 ஆயிரம், 5ஆம் பரிசு 3 ஆயிரம், இதையடுத்து 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment