வேடசந்தூர் பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த போலி பத்திரிகையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்பண்டாரி(35) இவர் எந்த தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளராக இல்லாத நிலையில் கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர் பெண்ணை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கோடாங்கிபட்டியை சேர்ந்த சேகர் என்பவர் தோட்டத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன்(40) என்பவர் கார்பன் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அங்கு அத்துமீறி உள்ளே நுழைந்து தான் பத்திரிக்கை நிருபர் என்றும் பணம் ரூ.40 ஆயிரம் கொடு இல்லை என்றால் உன்னை தொழில் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன ராஜேந்திரன் ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வெட்டி கொலை செய்து புதைத்து விடுவேன் என்று ரமேஷ் பண்டாரி மிரட்டியுள்ளார். மேலும் தனக்கு ரூ.30 ஆயிரம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததால், ராஜேந்திரன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரமேஷ் பண்டாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment