இந்த முகாமில், 11,12ம் வகுப்பு விடைத்தாள் தாள்கள் திருத்தும் பணி கடந்த 11ஆம் தேதி துவங்கியது. இதில், பொருளாதாரப் பிரிவில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து, பொருளாதார பிரிவு ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு விழா நடந்தது.
இதில், முதன்மைத் தேர்வு அதிகாரிகளாக பொருளாதார ஆசிரியர்கள் சேனாதிபதி, சரஸ்வதி, வள்ளிமயில், காளியப்பன், கூர்ந்தாய்வாளர்களாக செல்வராஜ், கோபால், நித்தியா ,செந்தில் செல்வி ஆகியோர் பங்கேற்றனர். உதவி தேர்வு அலுவலர்களாக சித்தநாதன், வீரக்குமார் வேலுமணி, உதயகுமார் ஜெனித், அழகு முருகன் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், கூர்ந்தாய்வாளர் கோபால் பேசியதாவது: சின்ன சின்ன ஊரணியாய், அந்த ஊரணியின் கரையிலே ஓங்கி நிற்கும் ஒரு மரத்துப் பறவையாக, ஒரே ஆசிரியர் குடும்பமாக நாம் அனைவரும் இணைந்து விடைத்தாள் திருத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர் என்ற பாகுபாடு நமக்குள் இல்லை. முதன்மை தேர்வு அதிகாரிக்கும் கூர்ந்தாய்வாளருக்கும், உதவி தேர்வு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான மன கசப்பும் இல்லை. நமக்குள் விடைத்தாள்களை மதிப்பிடுவதில் பிரச்சனை இல்லை. முள்ளின் தராசு போல நடுநிலை மாறாமல் மதிப்பிடு செய்தோம்.
பல ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் இருந்து வந்திருப்பீர்கள். நீங்கள் அனைவரும் டிஆர்பி தேர்வு எழுதி அரசு பள்ளி ஆசிரியராக வரவேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள். முயற்சியை கைவிடாதீர்கள். இதே மகிழ்ச்சியோடு அடுத்தாண்டு நாம் பழனியில் சந்திப்போம், என்றார்.
No comments:
Post a Comment