திண்டுக்கல் ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள சவரியார் பாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் பூப்போடுதல் அபிஷேகம், அம்மன் சக்தி கரகம், அம்மன் மின் அலங்கார தேரில் பவனி வருதல், மாவிளக்கு பூஜை, அம்மன் ஊஞ்சல் உற்சவம், அக்னிசிட்டி எடுத்தல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. இதில் அம்மன் சயன கோலத்தில் தெப்பத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து சென்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை சவரியார் பாளையம் பகுதி கோவில் விழா குழுவினர், ஊர் இந்து முக்கியஸ்தர்கள், இந்து வாலிபர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment