ரெட்டியபட்டி பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல் ரெட்டியபட்டி பகுதியில் கடந்த 17.02.2023 ம்தேதி திவேஷ் மேரி(60) என்பவரை கொலை செய்த வழக்கில் முத்துராஜ்(43) என்பவர் உட்பட 3 பேரை தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர்களில் முத்துராஜின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் விசாகன், முத்துராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முத்துராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment