குஜிலியம்பாறையில் தாசில்தார் மற்றும் கோட்ட வருவாய் ஆய்வாளரை மிரட்டியவர் கைது
கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த வாசுதேவன்(45). இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்ற வாசுதேவன் தாசில்தார் ரமேசையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து இருவரும் குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் வாசுதேவனை கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment