கொடைக்கானல் அருகே காண்ட்ராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியான கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணியை தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவா (24), ஜெயக்குமார் (39) ஆகிய 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அஜித் குமார் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment