பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு திண்டுக்கல்லில் வரவேற்பு.
பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனை தரிசிக்க திண்டுக்கல் வழியாக சென்றார். அப்போது திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ் அருகே மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் அனைவரும் நாராயணசாமிக்கு சால்வை இணைத்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, அம்சவல்லி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, வட்டார தலைவர் மதுரைவீரன், சிறுபான்மை பிரிவு தலைவர் காஜா மைதீன்,
மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா, எஸ்சி எஸ்டி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் காளிராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment