பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 18 May 2023

பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.


பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன, பழனி பகுதியில் மதியம் 3 மணியளவில் திடீரென வானில் மேகக் கூட்டங்கள் திரண்டு சாரல் மழை பெய்யத் தொடங்கி, பின்னர் பலத்த மழையாக மாறியது. இதற்கிடையே மழையின் போது பலத்த சூறைக்காற்றும் வீசியது. இதில் ராமநாதன் நகர் பகுதியில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்கம்பங்களும் சாய்ந்தன.

அதேபோல் பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுக்கு சுமார் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad