ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரையை திண்டுக்கல் காங்கிரஸார் வரவேற்றனர்...
ராஜீவ் காந்தி நினைவு ஜோதி கன்னியாகுமரியில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னை சென்றது. இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை பைபாஸ், தோமையார்புரத்தில் ஜோதி எடுத்து வரும் வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் அளிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை அம்சவல்லி திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கே இருந்து ஊர்வலமாக பேகம்பூர் டவுன், காமராஜர் சிலை, பஸ் ஸ்டாண்ட், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சென்றடைந்தது. பெண்கள், இளைஞர்கள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் இந்த ஜோதி வாகனத்திற்கு முன்னே டூவீலர் மற்றும் காரில் சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment