திண்டுக்கல் காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு
திண்டுக்கல் மாநகராட்சி காங்கிரஸ் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகே தியாகி ராமு ராமசாமி தொழிற்சங்க கொடி ஏற்றார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு உள்ள ஆட்டோ நிலையத்தில் மாவட்ட அமைப்புச் சாரா ஆட்டோ தொழிற்சங்க கொடியை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன், எஸ்சி எஸ்டி மாநகர மாவட்ட தலைவர் காளிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, அம்சவல்லி, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அலியார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment