திண்டுக்கலில் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் திண்டுக்கல் புனித மரியன்னை ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். இதில் மேற்கு தாசில்தார் சந்தனமேரி கீதா, வர்த்தக சங்கத் தலைவர் ஜி.சுந்தர்ராஜன், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், வட்டாரத் தலைவர் முருகானந்தம், திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க தலைவர் குமார், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவரும், முகாம் ஒருங்கிணைப்பாளருமான சாமி, மதர் தெரசா லயன்ஸ் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர்கள் சைலேந்திர ராய், அப்துல் ஹக்கீம், பொருளாளர் ராமச்சந்திரன்,
திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்க தலைவர் பாண்டி மணிகண்டன், பொதுத் தோற்றம் தலைவர் அர்ஜுன், சமூக சேவைகள் தலைவர் இளங்கோ, செயலாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் கண் புரை நோய், நீர் வடிதல், பார்வை குறைபாடு உட்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அறுவை சிகிச்சை செய்யும் நபர்களை பேருந்து மூலம் மதுரைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment