மதிமுக 30-வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செல்வராகவன் கொடியேற்றினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 30 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று மே-6 ம் தேதி காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்
செல்வராகவன் கழக கொடியேற்றி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாநகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன்,
மாநில பொதுக்குழு உறுப்பினர் ரியல் ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் காயத்ரி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, நகர துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சையது முகமது உள்ளிட்ட மாவட்ட,நகர, ஒன்றிய,
பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்சி ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment