திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை மே-7ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில்
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதில்
பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment