செம்பட்டி காவல் நிலையம் முன்பு எறும்பு பவுடர் சாப்பிட்டு பெண் தற்கொலை முயற்சி.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில் எம்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் மனைவி ரேணுகாதேவி(33) என்ற பெண் கொடுத்த புகாரின் மீது செம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த ரேணுகாதேவி, செம்பட்டி காவல் நிலையம் முன்பு எறும்பு பவுடர் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல்துறையினர் ரேணுகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்
இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment