திண்டுக்கல்லில் வீட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை திருடிய 2 பேர் கைது.
திண்டுக்கல் எழில் நகர், ரயில்வே காலனியில் கடந்த 6-ம் தேதி சரவணன் என்பவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், நகர் டி எஸ் பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர்கள் சித்திக், மனோகரன் மற்றும் நகர் உட்கோட்ட குற்றப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிவக்குமார்(26), சாந்தகுமார்(30) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment