ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து திண்டுக்கல்லில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர்.
தமிழர்களின் வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் ஜல்லிக்கட்டு அனுமதிக்க தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பளித்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் மாநகர திமுக செயலாளர் ராஜப்பா மற்றும் துணை செயலாளர் இளமதி ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும், பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஜானகிராமன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயா, சிவா, பானுப்பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment