பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து டி.என்.எஸ்.டி.சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு
போராட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இந்நிலையில் அலுவலக வளாகத்தின் உள்ளே விடாததால் ஆத்திரமடைந்த தொழிற்சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியலை கைவிட்டனர். இதையடுத்து அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு
மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். திண்டுக்கல் மண்டல செயலாளர் ஐயப்பன், மண்டல பொருளாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் திருப்பதி, லெனின், மத்திய சங்க செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது மக்களுக்கான பஸ் சேவை தடைபடுவதை தவிர்க்க உடல் தகுதியுள்ள டிரைவர், நடத்துனர்களை பணிக்கு அனுப்பு வேண்டும். டிரைவர், நடத்துனர்களை அலுவலகப் பணிக்கு அனுமதிக்க கூடாது.
பஸ் ஒழுகினால் நடத்துனர் பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment