திண்டுக்கல்லில் காங்கிரஸார் 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்.
2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 2000 ரூபாய் மாதிரி நோட்டுக்குகளை கட்டு கட்டாக பாடையில் அடுக்கி வைத்து, சங்குஊதி, ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, அம்சவல்லி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, துணை தலைவர் வேங்கை ராஜா, வட்டார தலைவர்கள் மதுரைவீரன், நாகலட்சுமி,
கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி, மாநகர மாவட்ட தலைவர் ரோஜா பேகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment