திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 515 பள்ளி வாகனங்களை ஆட்சியர் பூங்கொடி ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு இன்று (27.05.2023) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி 515 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உடனிருந்தார். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாரூதீன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, ஜாஸ்மீன், கருப்பசாமி, சண்முக ஆனந்த், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment