புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை அழைக்காததை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையிலும், மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதிரி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, மாதிரி குடியரசு தலைவராக வேடமிட்டவர் திறந்து வைத்தார். முன்னாள் மாநில சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, அம்சவல்லி, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாமன்ற உறுப்பினர் பாரதி, மாநகர மாவட்ட துணை தலைவர் அப்துல் ரகுமான், பொதுச்செயலாளர் வேங்கை ராஜா, கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சுமதி, மகிளா காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரோஜா பேகம்,
வட்டார தலைவர் மதுரைவீரன், மண்டல தலைவர் நாகலட்சுமி, சிறுபான்மை பிரிவு மாநகர மாவட்ட தலைவர் காஜா மைதீன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், மாணவர் காங்கிரஸ் தலைவர் அமீர் அம்ஜா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment