ஐவர் கால்பந்து போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மஸ் லயன் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மேரி மாதா ஐவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 40 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப்போட்டியில் மதுரை அணியும் , திண்டுக்கல் அணியும் மோதின. இப்போட்டியில் முதல் பரிசை திண்டுக்கல் சேது எப்சி அணியும், இரண்டாம் பரிசை மதுரை சேவியோ எப் சி அணியும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கோப்பை மற்றும் ஊக்கத் தொகையினை மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா வழங்கினார். இதில் மாமன் உறுப்பினர் வெங்கடேஷ், சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜா மைதீன் மற்றும் லயன் சங்க நிர்வாகி திபூர்சியஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment