மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அக்னி 2023 ஊர் காவல் படை வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில் முறை விளையாட்டுப் போட்டி(19.05.2023 to 21.05.2023) நடைபெற்றது. இதில் திண்டுக்கல் சரகம் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசு -மீட்பு பணியில் தங்கம் வென்றனர்.
இரண்டாம் பரிசு - தீயணைப்பு பணி வெள்ளி வென்றனர்.
திண்டுக்கல் ஏரியா கமாண்டர் ஷர்மிளா பாலகுரு துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் பரிசு வென்றனர். இவர்கள்
அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். வெற்றி பெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளை எஸ்பி பாராட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment