திண்டுக்கல்லில் பரபரப்பு அரசு மருத்துவமனை அருகே கூலித் தொழிலாளிக்கு கத்தி குத்து
திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் செருப்பு தைக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவர் நீண்ட நாட்களாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார் வழக்கம் போல் இன்றும் கதிரேசன் தன் வேலையை செய்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சேகர் என்ற நபர் செருப்பு தைக்க வேண்டும் என்று அவரிடம் வந்துள்ளார் திடீரென இருவருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் கதிரேசன் வைத்திருந்த செருப்பு அருக்கும் கூர்மையான கத்தியை எடுத்த சேகர் ஆத்திரத்தில் கதிரேசனை தாக்கி உள்ளார் இதில் கதிரேசன் வாயில் கத்திக்குத்து விழுந்ததில் வாயில் ரத்தம் வழிந்தது மேலும் வலி தாங்காமல் கதிரேசன் கூச்சலிட்டார் இதனால் சேகர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார் ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் சேகரை மடக்கிப் பிடித்தனர். மேலும் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் சேகரை கைது செய்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் பலத்த காயம் அடைந்த கதிரேசனை அங்குள்ள திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment