மான் வேட்டை ஆடிய நால்வர் கைது வனத்துறை அதிரடி கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் திலகராஜ், ராம்குமார், பெரியசாமி, பீட்டர் ராஜா, முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கன்னிவாடி வனச்சரகம், செம்பட்டி பிரிவு, பன்றிமலை கிராமம், புல்லாவெளி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது ஆண் கடமான் ஒன்று வேட்டையாடியது சம்பந்தமாக WL OR - 07/2023 வன உயிரினக்குற்றம் பதிவு செய்யப்பட்டு மணலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிலிங்கம், ரஞ்சித், மதன்குமார் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் மூவரையும் ஆத்தூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி பழனி சிறைச்சாலையில் 15 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்கள் மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பள்ளப்பட்டி தாலுக்கா செய்தியாளர். பி.கன்வர்பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment