திண்டுக்கல் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற கும்பல் கைது...
திண்டுக்கல் A.வெள்ளோடு, கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு DSP.நாகராஜன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் வெள்ளோடு கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்தப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த ஜான் பீட்டர்(40), எட்வின்(25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் பள்ளப்பட்டி தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment