கோடைகால பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம், சவகர் சிறுவர் மன்றம் சார்பாக கோடைகால கலை பயிற்சி முகாம் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மே-1ஆம் தேதி முதல் மே-16ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 5 வயது
முதல் 16 வயதிற்கு உட்பட்ட 200 மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், சிலம்பம், நாட்டுப்புற நடனம், ஜிம்னாஸ்டிக், கராத்தே ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி நிறைவு நாளான இன்று மே-16ம் தேதி மாணவர்கள் கடந்த 16 நாட்களாக கற்ற கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம், கயிறு ஏறி அதில் யோகாசனம் உள்ளிட்ட இன்னும் பல சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். சிறப்பு அழைப்பாளராக கலை பண்பாட்டு துறை மதுரை மண்டல இணை இயக்குனர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரமணி, கராத்தே மாஸ்டர் மோகன் உள்ளிட்ட மாஸ்டர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment