வீட்டை அபகரித்து பெற்றோரை விரட்டிய பிள்ளைகள் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 May 2023

வீட்டை அபகரித்து பெற்றோரை விரட்டிய பிள்ளைகள்

 


வீட்டை அபகரித்து பெற்றோரை விரட்டிய பிள்ளைகள் -எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.


திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு ராயர்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவரது மனைவி சலேத்மேரி (65). இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 1 மகள் - உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

விவசாயம் செய்து வந்த ராஜேந்திரன் தனது பெயரில் இருந்த 25 சென்ட் நிலத்தை 2-வது மகனான பாஸ்கரன் என்பவருக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார். ராஜேந்திரன் மற்றும் சலேத் மேரியை இறுதி வரை தான் கவனித்துக் கொள்வதாக உறுதி மொழி அளித்த பாஸ்கரன் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனை நம்பி அந்த இடத்தில் வீடு கட்டி வந்துள்ளார். இதற்காக ராஜேந்திரன் பெயரில் ரூ.5 லட்சம் லோன் வாங்கி  வீடு கட்டியுள்ளனர். அனைத்தும் முடிந்த பிறகு பெற்றோரை வீட்டில் சேர்க்காமல் பாஸ்கரன் விரட்டி விட்டுள்ளார்.

இதற்கு பாஸ்கரனின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். தனது இடத்தை அபகரித்துக் கொண்டு தனக்கு உணவு மற்றும் செலவுக்கு பணம்

 தராத பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜேந்தி ரன் தனது மனைவியுடன் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 

வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad