செட்டிநாயக்கன்பட்டி அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது.
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45) இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சரண்குமார் (21), முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (21), சூர்யபிரகாஷ் (19) ஆகிய 3 பேர் திடீரென அய்யனாரை மறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை வழிப்பறி செய்து தப்ப முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார் 3 பேரையும் கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட பணம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment