காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரம் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 11 April 2023

காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரம் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு.

 


காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரம் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு.


தோட்டக்கலைத் துறையின் கீழ், செயல்பட்டுவரும், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் இந்தோ-இஸ்ரேல் தூதரக அதிகாரி யாயிர் ஏசல், வேளாண் தொழில் நுட்ப ஆலோசகர் 10.04.2023 அன்று பார்வையிட்டார்.

மத்திய அரசு நிதி உதவியுடன் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையத்தில் 2017-ம் ஆண்டிலிருந்து காய்கறிகள் சாகுபடிக்கான தேவையான குழித்தட்டு நாற்றுகள் 07.45 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி மற்றும் பாதுகாக்கப்பட்ட முறைகளில் காய்கறி செயல்விளக்கத்திடல்கள் அமைத்து காய்கறி சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைக்காலங்களில் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் போன்ற தன்மைகளை அறிந்து காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ற நுண்ணீர் பாசனமுறை, நுண்ணீர் உரமேலாண்மை மற்றும் தானியங்கி கருவிகள் செயல்பாடு மற்றும் வறட்சிக்காலங்களில் பாதுகாப்பாக பயிர்களை சாகுபடி செய்வதற்கு உகந்த உத்திகள் போன்ற தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கினார். அத்துடன் பயிர்சாகுபடியில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும், பசுமைக்குடில்களின் பராமரிப்பு மற்றும் காலநிலைக்கு ஏற்ற நீர்பாசனமுறை பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

குழித்தட்டு நாற்றாங்கல் உற்பத்திக்கு தேவையான தென்னை நார் கழிவுகளை உற்பத்தி செய்யும் Sai Cocopeat Export Private Ltd., நிறுவனத்தினின் உற்பத்தி செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார். இந்நிகழ்வில் தோட்டக்கலை துணை இயக்குநர் சீத்தாலட்சுமி, உதவி இயக்குநர்கள் அலெக்ஸ் ஐசக் மற்றும் பாண்டியராஜன், திட்ட மேலாளர் பெப்பின் இளம்பரிதி மற்றும் காய்கறி மகத்துவ மைய அலுவலர்கள், வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad