போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 25 வருடம் சிறை.
திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சகாய பெஞ்சமின் (30) என்பவரை போக்சோ வழக்கில் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சரண் குற்றவாளி சகாய பெஞ்சமின் என்பவருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment