தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூபாய் 19.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ரூபாய் 19.17 கோடி மதிப்பீட்டில் மருத்துவர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து அரசு துறையிலும் பணிபுரியும் அலுவலர்களுக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 88 அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளுக்கான கட்டிட வேலை நடைபெற்று வந்தது. கட்டிடப் பணிகள் முடிந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வழியாக அலுவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் அலுவல குடியிருப்பில் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் சிறுமலை வன உரிமைக்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் மூர்த்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment