கள்ளக்காதலி மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 11 April 2023

கள்ளக்காதலி மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

 


கள்ளக்காதலி மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் 

பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- 54 கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும், 21 வயது திருமணம் ஆகாத பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டனர். இதனால் அந்த பெண் கர்ப்பிணி ஆனார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக பட்டிவீரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த ராமச்சந்திரன், அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து, பிறந்து இரண்டு நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை கொன்று புதைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர்கள் அப்போது அருகே உள்ள ஒரு தோட்டத்திற்கு குழந்தை எடுத்துச் சென்று கொன்று அப்பகுதியில் புதைத்தனர். ஆனால் குழந்தையின் கை விரல்கள் மட்டும் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பட்டிவீரன்பட்டி போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதை ராமச்சந்திரனுக்கும் அவருடைய கள்ள காதலிக்கும் பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தை என்பதால் அதனை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் ராமச்சந்திரன் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவருடைய கள்ளக்காதலி மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கூடுதல் மாவட்ட கோர்ட்டில் அரசு தரப்பில் ராமச்சந்திரன் மீதான வழக்கை வக்கீல் சூசை ராபர்ட் நடத்தி வந்தார்.

பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad