திண்டுக்கல்லில் தீப்பிடித்து மரங்கள் கருகியது.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர் நந்தவனப்பட்டியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு 11.45 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து எரிவதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதை கேட்டதும் அலறியடித்து பாலசுப்பிரமணி ஓடி வந்தார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணை த்தனர். இருந்த போதும் கடையில் இருந்த மரங்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
இது குறித்து போலீசாரு க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீயை கொளுத்திச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment