அரசு வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் மோசடி-ஒருவர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனக்கு அரசு வேலை கோரி தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 40) என்பவரை அணுகினார். இதற்காக ரூ.15 லட்சம் பணமும் பாஸ்ரகன் அவரிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட முத்துப்பாண்டி சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாஸ்கரன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெ க்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் கொண்ட போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment