திண்டுக்கல்லில் காங்கிரஸ் தலைவருக்கு வருகின்ற 24ம் தேதி வரை சிறை
திண்டுக்கல்லில் கடந்த 6ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீதிபதியின் நாக்கை அறுப்போம் என திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் பேசினார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் துரை மணிகண்டன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் துரை மணிகண்டன் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, ஏப்ரல் 24ஆம் தேதி வரை மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment