விடுதலை சிறுத்தை கட்சியை கண்டித்து, திண்டுக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழக பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணியின் மாநில தலைவர் தடா.பெரியசாமி வழிமறித்து இழிவாக பேசி தாக்குதல் நடத்த முயற்சி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து கைது செய்ய கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன், பட்டியல் அணி மாநிலச்செயலாளர் சரவணன், பட்டியல் அணி, மாவட்ட தலைவர், இளையராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோசம் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment