புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி, திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 4வது வார்டு ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நேரு பாண்டி முகாமை துவக்கி வைத்தார். இதில் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மாநகர செயலாளர் ராஜப்பா, துணை செயலாளர் இளமதி, வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன், மாமன்ற உறுப்பினர்கள் கிருபாகரன், சரண்யா, சுவாதி, இந்திராணி உள்ளிட்ட மாவட்ட, மாநகர, பகுதி, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் நான்கு பகுதி, ஒன்றியங்களில் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ....
No comments:
Post a Comment