சொத்தை அபகரித்து கொலை மிரட்டல் விடுவதாக மகன் மீது , திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், முதிய தம்பதியர் பரபரப்பு புகார்
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை, சடையன் களம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மனைவி மரிய பாக்கியம். இவர்கள் தவசிமடையில் மா விவசாயம் செய்து வருகிறார்கள். மரிய பாக்கியத்திற்கு 2 ஏக்கர் 36 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை மரிய பாக்கியத்தின் இளைய மகன் லூர்து ராஜ், இவருடைய மனைவியை சகாய பிரியா ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டு மரிய பாக்கியத்தை அந்த நிலத்திற்குள் அனுமதிக்காமல் அடிக்கடி தாய் மரிய பாக்கியத்தை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் மரிய பாக்கியம் புகார் மனு அளித்தும் தன்னுடைய இளைய மகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மகன், மருமகள் கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததால், கடந்த 10 நாட்களாக உயிருக்கு பயந்து சொந்த ஊரை விட்டு முதிய தம்பதியர் தலைமறைவாகினர்.
இந்திலையில் இன்று மகனிடம் இருந்து உயிர் பாதுகாப்பு கேட்டு, திண்டுக்கல் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் ஆரோக்கியசாமி, மரியபுஷ்பம் ஆகியோர் புகார் மனு அளித்தனர். மனுவில் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டு அடித்து துன்புறுத்தி வரும் இளைய மகன் லூர்துராஜ் மற்றும் மருமகள் சகாய பிரியா மீது நடவடிக்கை எடுத்து தங்கள் நிலத்தை மீட்டுத் தரும்படி தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment