பருப்பு விற்பனை செய்வதாக ரூ. 3 கோடி மோசடி: சென்னை சகோதரர்கள் இருவர் மீது திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு...
திண்டுக்கல் செல்வி மினரல்ஸ் மேலாளர் மரிய செல்வராஜ் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இயங்கி வரும் பிரபல செல்வி மினரல்ஸ் நிறுவனம் அரசு நுகர்வோர் நிறுவனத்தில் பருப்பு வழங்குவதாக ஒப்பந்தம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் செல்வராஜ் மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரிடம், ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்வதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 8 கோடியே 10 லட்ச ரூபாய் வங்கி மூலம் பணத்தை வழங்கியுள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர்கள் இருவரும் 50 சதவீத பருப்புகளை மட்டும் வழங்கி உள்ளனர். மீதமுள்ள 50 சதவீத பருப்பு வழங்கவில்லை. தொடர்ந்து செல்வராஜ் மற்றும் அண்ணாதுரை உடன் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் சென்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பணத்தை கேட்டு வந்தோம். இந்நிலையில் இருவரும் தலைமறை ஆகிவிட்டனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
இந்த மோசடி புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment