திண்டுக்கல்லில் 12 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி டாக்பியா ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளியனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் காமராஜ்பாண்டியன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்சி மாற்றத்தை அடுத்து விதி மீறல்கள் என்று பணியாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர் கடன் நகை கடன் மகளிர் சுய உதவிக் குழு கடன் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்வு செய்ய வேண்டும். நியாய விலை கடை மற்றும் சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக தேர்வாணைய குழு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 2 நகர கூட்டுறவு கடன் சங்க ங்கள் பணியாற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் 686 நியாய விலைக் கடைகளில் குடிமை பொருள் வழங்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment