திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிதற்கொலை முயற்சி... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 3 April 2023

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிதற்கொலை முயற்சி...

 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தற்கொலை முயற்சி


திண்டுக்கல் மாவட்டம் பழனி கலையம்புத்துறை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இன்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடலில் தண்ணீர் ஊற்றி அவரை மீட்டனர். அவர் மனுவில் குறிப்பிட்டிருப்பவராவது, தனக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுமைப்படுத்துவதாகவும், மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிர் பாதுகாப்ப  அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad