திண்டுக்கல் முறுக்கு வியாபாரி கொலையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (46). முறுக்கு வியாபாரி. நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க வந்த மகன் தௌபீக் (14) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இச் சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியில் முன்னாள் குடியிருந்த லோகேஷ்வரன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள லோகேஸஷ்வரனின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 5 பேரிடம் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் ஆனந்தன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment