திண்டுக்கல்லில் உயிர்த்தெழுந்த ஏசுநாதர் சப்பரம் பவனியை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கும் மேட்டுப்பட்டியில் உள்ள 332 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னையின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உயிர்த்தெழுந்த ஏசுநாதர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சப்பரத்தை நகர்வலத்திற்கு துவக்கி வைத்தார். இதையடுத்து சப்பரம் மேட்டுப்பட்டியில் இருந்து பேகம்பூர், அரசமர வீதி, பழனி ரோடு, தெற்கு ரத வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. வரும் வழியெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் ஏசுநாதருக்கு காணிக்கையாக பக்தர்கள் உப்பு மிளகை வழங்கினர். மேலும் அனைவருக்கும் மோர், ஜுஸ் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில்
நகர் தெற்கு போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜா மைதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment