தமிழ்நாடு அரசு 3 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில அளவில் உண்ணா விரத போராட்டம்- அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் முடிவு.
தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமைச் சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வத்தார். மாநில தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி, பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர்கள் உதயகுமார், ஜெய்சங்கர், சரவணகுமார், சுகுந்த குமார் ,கண்ணதாசன், பொதுச் செயலாளர் பிரபாகரன்,
மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சுப்பிரமணி கலந்துகொண்டு கூறியதாவது: அரசு 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கழிவு நீக்கம் செய்யப்பட்ட அனைத்து அரசு ஊர்திகளையும் அகற்றிவிட்டு புதிய ஊர்திகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் ஏற்கனவே கழிவு நீக்கம் செய்யப்பட்ட
ஊர்திகளையும், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஊர்திகளையும் அகற்றிவிட்டு புதிய ஊர்திகள் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர்கள் பணியிடத்தில் காலம் முறை ஊதியத்திலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமும் காலி பணியிடங்களை நிரப்புமாறு அரசை வலியுறுத்துகிறோம்.
31.5.2009 இல் இருந்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களின் தர ஊதியத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு, ஏழாவது ஊதிய பரிந்துரையின் படி சம வேலைவாய்ப்பு சம ஊதியம் கொண்டு வர வேண்டும். ஓட்டுநரின் நிலை கிரேடு 8, கிரேடு11, கிரேடு 15 என வகைப்படுத்தி ஒன்றிய அரசில் பணி புரியும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுவது போல தமிழக அரசு துறையில் பணியாற்றும் உறுதி ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும். இவற்றை நாங்கள் தீர்மானமாக மாநில பொது குழுவில் நிறைவேற்றி உள்ளோம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உடனடியாக எங்கள் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் இருக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment