திண்டுக்கல்லில் வீடு புகுந்து முறுக்கு வியாபாரி வெட்டி படுகொலை செய்த குற்றவாளி கைது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் -46 முறுக்கு வியாபாரி. கடந்த 2-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை வீடு புகுந்து மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் இதை தடுக்க வந்த இவரது மகன் தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அப்துல்லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில், நகர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு அய்யம்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த யோகேஷ்வரன்-39ஐ தனிப்படையினர் கைது செய்து நகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார்
தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment