திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல்லில் பாவேந்தர் கல்விச்சோலை சார்பில் பொதுமக்கள் அன்பளிப்புடன் திண்டுக்கல் நகரின் மத்தியில் திருவள்ளுவருக்கு 500 கிலோ எடையில் 6 அடி உயரத்தில் வெண்கல சிலை தயார் செய்யப்பட்டது. இந்த சிலை வைக்க சிலை அமைப்பு குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனை அடுத்து கடந்த 21 வருடங்களாக சிலை திறக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளி காம்பவுண்ட் சுவர் அருகே திருவள்ளூர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கான பணிகள் நடைபெற்று வந்தபோது, சிலையை திறக்க வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அனுமதியின்றி சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருவள்ளுவர் சிலை அமைப்புக்கு குழுவினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து நீதிமன்றம் சிலையை திறக்க அனுமதி அளித்தது.
இதனை அடுத்து திருவள்ளுவர் சிலையை ஏப்ரல் -15 இன்று மாலை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி .செந்தில் குமார், காந்திராஜன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, சிலை அமைப்பு குழுவினர் கணேசன், வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment