3 மாநிலங்களில் கஞ்சா வியாபாரம் செய்யும் பிரபல கஞ்சா வியாபாரியை கைது .
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் விற்பனை செய்யும் பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திர மாநிலம், ஆனந்த்பூர் பகுதியை சேர்ந்த மனோகர் 31. இவர் மீது 3 மாநிலங்களிலும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் வத்தலகுண்டு பகுதியில் ஐ.ஜி. தனிப்படையினர் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி மனோகரன் ஆவார். இந்நிலையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்படி,
ஐ ஜி தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த மனோகரனை சுற்றி வளைத்து கைது செய்து வத்தலகுண்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment